குறுக்கெழுத்து – 2 புதிருக்கான விடைகளும் விளக்கங்களும்:
குறுக்காக:
4.பாதி மருந்துடன் உண்டாகி சிவந்த காரணம் (5)
விடை: மருதோன்றி
விளக்கம்: ‘மரு’ = பாதி மருந்து; ‘தோன்றி’ = ‘உண்டாகி’; மருதோன்றி (மருதாணி) = சிவந்த காரணம்
5.சக்கரக் கிழங்கு (3)
விடை: உருளை
விளக்கம்: உருளை = சக்கரம் / உருளைக்கிழங்கு
7.அமெரிக்கத் தலைவர் தலை தப்ப நரகாசுரன் தலை சாய உதவினாள் (2)
விடை: பாமா
விளக்கம்: அமெரிக்கத் தலைவர் = ‘ஒபாமா’; தலை தப்பினால் ‘ஒபாமா’ – ‘ஒ’ = ‘பாமா’; கிருஷ்ணருடன் சேர்ந்து பாமாவும் நரகாசுரனுடன் போரிட்டதாகக் கதை.
9.கண்ணன் வாத்தியம் புழல் இழந்து பழி வாங்கும் விளையாட்டு (6)
விடை: பல்லாங்குழி
விளக்கம்: ‘கண்ணன் வாத்தியம்’ = புல்லாங்குழல்; ‘புல்லாங்குழல் – புழல் + பழி’= ‘பல்லாங்குழி’ (விளையாட்டு)
10.கடை மாறாது பழைய கடையில் ‘பழைய’ இருப்பது (2, 4)
விடை: ஈறு கெடாமல்
விளக்கம் – கடை (கடைசி) = ஈறு; மாறாது = கெடாமல்; ‘பழைய கடை’ = ‘பழைய’ ஈறு கெடாமல் இருக்கும் எச்சம்.
11.வாலில்லாச் சிறுவன் போவது விரைவாக அல்ல (2)
விடை: பைய
விளக்கம்: சிறுவன் = ‘பையன்’; பையன் – ‘ன்’ = ‘பைய’ (மெதுவாக)
12.மஞ்சள் பூ அரசனுடன் சேர்த்து ஔவை தந்தது (3)
விடை: கொன்றை
விளக்கம்: அரசன் = ‘வேந்தன்’; ‘கொன்றை வேந்தன்’ – அவ்வை எழுதியது; கொன்றை ஒரு மஞ்சள் நிறப் பூ.
13.காலொடிந்த தாரை முன் பத்தில் ஒன்று இவர்களை நினையான் ஏகப்பத்தினியான் (2,3)
விடை: இரு மாதரை
விளக்கம்: பத்தில் ஒன்று = 1/10 = ‘இருமா’; காலொடிந்த ‘தாரை’ = ‘தரை’; ‘இப்பிறவிக்கி இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்’ – கம்ப ராமாயணம்.

நெடுக்காக:
1.வாலிழந்த கால வாகனம் உரம் (2)
விடை: எரு
விளக்கம்: ‘கால (எம) வாகனம்’ = ‘எருமை’. ‘எருமை’ – ‘மை’ = ‘எரு’ (உரம்).
2.கூடினால் இரண்டில் பாதி சுட்டால் பசு மாறாட்டம் (3, 4)
விடை: ஒன்று பட்டால்
விளக்கம்: ‘இரண்டில் பாதி’ = ‘ஒன்று’; ‘பசு மாறாட்டம்’ = ‘சு’-வுக்கு பதில் ‘ப’; ‘சுட்டால்’ => ‘பட்டால்’. ‘கூடினால்’ என்பதன் பொருள்.
3.முள் குத்தும் உணர்வுடன் கூளத்தின் துணையுடன் இடுப்பில் இதன் இருப்பிடம் (6)
விடை: சுருக்குப்பை
விளக்கம்: ‘முள் குத்தும் உணர்வு’ = ‘சுருக்’; ‘கூளத்தின் துணை’ = ‘குப்பை’;
6.வேழத்தலை உயிர்விட்டு அமருமா, காலால் கலந்து குமரனைக் கூப்பிடு (2,5)
விடை: வேலா மால்மருகா
விளக்கம்: ‘வேழத்தலை’ = ‘வே’; ‘அமருமா’ – ‘அ’ (உயிர் விட்டு) = ‘மருமா’; ‘வே’ + ‘மருமா’ + ‘காலால்’ => கலந்தால் விடை வரும்.
8.சிலம்பில் இருக்கும் சொக்கத் தங்கமே (3,3)
விடை: மாசறு பொன்னே
விளக்கம்: ‘சொக்கத் தங்கமே’ = ‘மாசறு பொன்னே’; சிலப்பதிகாரத்தில் கோவலன் சொல்வதாக வரும் வரிகள் ‘மாசறு பொன்னே, வலம்புரி முத்தே..’. பின்னர் ‘பூம்புகார்’ திரைப்படத்திலும் இந்த வரிகளை வைத்து ஒரு பாடல் வந்தது.
14.மறைத்த விஷயம் வெளியே தெரிந்துவிடுமோ என்று கவலைப்படு (2)
விடை: தவி
விளக்கம்: ‘தவி’ = ‘கவலைப்படு’; ‘மறைத்த விஷயம்’ – இதில் ‘தவி’ மறைந்து வருகிறது.

இதுவரை விடை சொன்னவர்கள்
பூங்கோதை
வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
திருமூர்த்தி
முத்து
பார்த்தசாரதி/அம்ருதா
கே.ஆர். சந்தானம்
நாகராஜன்
10 அம்மா
யோசிப்பவர்
தினேஷ் முகிலன்

Sorry, the comment form is closed at this time.

   
© 2012 புதிர்மயம் Suffusion theme by Sayontan Sinha