குறுக்கெழுத்து – 3 புதிருக்கான விடைகளும் விளக்கங்களும்.
குறுக்காக:
1.அகர முதலாக மந்திரவாதி செய்வதா? வேண்டியதா? (5)
விடை: அவசியமா
விளக்கம்: ‘அ’ (அகர முதலாக) + ‘வசியமா’ (மந்திரவாதி செய்வதா)
4.அரை பேனாவின் உயிர் (2)
விடை: மசி
விளக்கம்: மசி = அரை (அரைத்தல்)
6.போன மாத நடுவில் திரும்பி பாதி விம்மல் சூழ ஒரு பறவை? (4)
விடை: விமானம்
விளக்கம்: ‘போன மாத’ – நடுவில் திரும்பி இருப்பது ‘மான’. ‘விம்’ = பாதி விம்மல்.
7.இக்கரை ஓரத்தை விட்டு 9-இல் ஒன்று இடையில் திறந்து மூட (4)
விடை: இமைக்க
விளக்கம்: ‘இக்கரை’ ஓரத்தை விட்டால் ‘இக்க’. 9 குறுக்காக விடையில் முதல் வார்த்தை ‘மை’. ‘இக்க’-வின் இடையில் ‘மை’ சேர்ந்தால் ‘இமைக்க’.
9.உரை தன்மையாக உன்னை விட்டுக் கலங்கினாலும் கண்ணழகு கெடாமல் (1, 4)
விடை: மை கரையாமல்
விளக்கம்: ‘உரை தன்மையாக’ – ‘உன்’ (உன்னை விட்டு)
12.நூறு வென்றதால் தலையிழந்த 6-ஐக் காக்க 3 வேண்டியவள் (4)
விடை: பாஞ்சாலி
விளக்கம்: ‘மானம்’ = தலையிழந்த ‘விமானம்’ (6 குறுக்காக). கௌரவர்கள் (நூறு பேர்) சூதாட்டத்தில் வென்றதால் ‘மானம்’ காக்க ‘மாலை’ (3 நெடுக்காக) (திருமாலை) வேண்டியவள்.
14.குரங்கும் களிறும் கலந்த ஆட்டம் முடிந்தது இவ்வாறு (4)
விடை: வினையாக
விளக்கம்: ‘கவி’ = குரங்கு. ‘யானை’ = களிறு. விளையாட்டு முடிவது வினையாக.
17.வேலோடு சேர்ந்து ஈறு கெடாமல் செய்யுமோ? (2)
விடை: ஆல்
விளக்கம்: ஆலும் வேலும் பல்லுக்குறுதி
18.தீப நுனி தலையிழந்து முற்ற நடுவில் சுற்றும் ஆசையில்லாமல் (5)
விடை: பற்றற்று
விளக்கம்: ‘ப’ (தீப நுனி) + ‘ற்ற’ (தலையிழந்து பற்ற) + ‘ற்று’ (நடுவில் சுற்றும்). ஆசையில்லாமல் என்ற பொருளில் வருகிறது.
நெடுக்காக:
1.குருவிடம் உயிருடன் குடம் எடுத்து நீர் கொட்டுவது (3)
விடை: அருவி
விளக்கம்: ‘குருவிடம்’ – ‘குடம்’ (குடம் எடுத்து) = ‘ருவி’ + ‘அ’ (உயிர் எழுத்து)
2.தந்தை மறுமணம் செய்ததால் வந்த நோய்? (5)
விடை: சின்னம்மை
விளக்கம்: சின்னம்மை = சிற்றன்னை
3.ஒரு வேளை அணிவது (2)
விடை: மாலை
4.உம்மை விட்டு உயிர் நீங்கி வேறுயிர் சேர்வது சரியா நேரெதிரா? (3)
விடை: மறுமை
விளக்கம்: உயிர் விட்டு வேறுயிர் சேர்வது = மறுமை. ‘உம்மை’ – ‘உ’ + ‘இ’ = ‘இம்மை’ = மறுமையின் நேரெதிர்.
5.சோக ராகம் காலின்றி தாவ கடை நடுவில் போக்கிடம் (4)
விடை: முகவரி
விளக்கம்: முகாரி = சோக ராகம், காலின்றி = ‘முகரி’. ‘தாவ கடை’ (கடைசியில்) = ‘வ’ போக்கிடம் என்ற பொருளில் வருகிறது.
7.இணங்காத சங்கீதமா? (3)
விடை: இசையா
8.சூழ்ச்சி நடுவில் தேர் கொடுத்தவன் திரும்பி வர அரையில் கால் (4)
விடை: சரிபாதி
விளக்கம்: சூழ்ச்சி = ‘சதி’. தேர் கொடுத்தவன் = ‘பாரி’. ‘சதி’ நடுவில் ‘பாரி’ திரும்பி ‘ரிபா’வந்தால் ‘சரிபாதி’. அரையில் கால் சரிபாதி தானே.
10.கலிப்பாவில் மெய்மறந்த மயிலை வாசி (3)
விடை: கபாலி
விளக்கம்: ‘கலிப்பா’ – ‘ப்’ (மெய் மறந்து) = ‘கபாலி’
11.மன்றம் தனை மெய் நீங்கக் கலங்கி நினைவிழ (3, 2)
விடை: தன்னை மற
விளக்கம்: ‘மன்றம் தனை’ – ‘ம்’ (மெய் நீங்க) = ‘மன்றதனை’ கலங்கினால் ‘தன்னை மற’. ‘நினைவிழ’ என்ற பொருளில் வருகிறது.
13.நெடுக்காக 1 தருவதை இடையில் இடை மாற்றத் தெரியும் சாடை (3)
விடை: சாயல்
விளக்கம்: நெடுக்காக ௧ = ‘அருவி’. அது தருவது ‘சாரல்’. ‘சாரல்’ – ‘ர’ + ‘ய’ (இடையில் வரும் இடையினத்தை மற்றொரு இடையினத்தால் மாற்ற) = ‘சாயல்’. ‘சாடை’ என்ற போருளிக் வருகிறது.
15.முதிர் முதிராத மரம் (3)
விடை: கன்று
16.மங்கள மிருகம் திரும்ப (2)
விடை: சுப
விளக்கம்: ‘பசு’ திரும்பினால் ‘சுப’. ‘மங்கள’ என்ற பொருளில் வருகிறது.

Sorry, the comment form is closed at this time.

   
© 2012 புதிர்மயம் Suffusion theme by Sayontan Sinha