குறுக்கெழுத்து – 4 புதிருக்கான விடைகளும் விளக்கங்களும்:
குறுக்காக:
5.போன பிறவித் தொடர்பு அறிய இருட்டறை இரண்டு விட்டு குவி (5)
விடை: விட்டகுறை
விளக்கம்: இருட்டறை – இரு (இரண்டு விட்டு) + குவி
6.அருகே மூன்றாவதின் திறப்பைத் தாங்க முடியாது (2)
விடை: கண்
விளக்கம்: மூன்றாவது – சிவனின் நெற்றிக்கண்; ‘அருகே’ என்ற மற்றொரு பொருளிலும் வருகிறது
7.பிராமண வீட்டில் உனக்கு என்ன பார்வை (3)
விடை: நோக்கு
விளக்கம்: பிராமண வழக்கில் ‘நோக்கு’ என்பது ‘உனக்கு’ என்ற பொருளில் வரும். ‘பார்வை’ என்ற பொருளிலும் வரும்.
8.பத்மா காலின்றி தடையோடு சுற்றுவது பாயா ஊரா? இரண்டும்தான் (5)
விடை: பத்தமடை
விளக்கம்: ‘பத்மா’ காலின்றி = ‘பத்ம’ +’தடை’ = பத்தமடை. பாய்களுக்குப் பெயர் போன ஊர்.
11.எதை சுற்ற தந்தம் தலை விட்டுப் பெற்றவர் (2, 3)
விடை: எம் தந்தை
விளக்கம்: ‘எதை’ + ‘தந்தம்’ – ‘த’ (தந்தம் என்பதில் தலை) = ‘எம் தந்தை’. ‘பெற்றவர்’ என்ற பொருளில் வருகிறது.
12.புல்லா சைவத்திற்கு எதிராக மாறியது? (3)
விடை: புலால்
14.இதன் வருகையில் ஆபத்து தலையை விட்டுப் பறந்துவிடும் (2)
விடை: பசி
விளக்கம்: பசி வந்தால் பத்தும் (ஆபத்து தலையை விட்டால் பத்து) பறந்து போகும்.
15.வையாமல் கானா நடுவில் வந்தாலும் இனிப்பு அலுக்காது (5)
விடை: திகட்டாமல்
விளக்கம்: வையாமல் = திட்டாமல். நடுவே ‘க’ வந்தால் ‘திகட்டாமல்’.
நெடுக்காக:
1.ஈரம் தலைவனின்றி தவிக்க ஈரம் (6)
விடை: ஈவிரக்கம்
விளக்கம்: ‘ஈரம்’ + ‘விக்க’ (தவிக்க தலைவனின்றி) = ‘ஈவிரக்கம்’. ‘ஈரம்’ என்ற பொருளிலும் வருகிறது.
2.முன்னாள் முதல்வரின் மூச்சிருந்த இடம்? (3)
விடை: கடமை
விளக்கம்: ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்…கடமை அது கடமை..’ என்பது ஒரு எம்.ஜி.ஆர் படப் பாடல்.
3.வைகறையில் யோசித்தும் யோகமின்றிக் கலைத்துக் காவலில் போட்டு (2, 3)
விடை: சிறை வைத்து
விளக்கம்: ‘வைகறை’ +’யோசித்தும்’ – ‘யோகம்’ -> கலந்தால் ‘சிறை வைத்து’. ‘காவலில் போட்டு’ என்ற பொருளில் வருகிறது.
4.சுந்தரர் சுமந்தது மண்டைக்குள் முதலில் கூவ (2,2)
விடை: மண் கூடை
விளக்கம்: ‘மண்டை’க்குள் ‘கூவ’வின் முதல் எழுத்து நுழைய ‘மண் கூடை’ வருகிறது. மதுரை சுந்தரேஸ்வரர் பிட்டுக்கு மண் சுமந்ததாக ஐதீகம்.
9.கந்தர் வாகனம் நெல் வகை சேர்ந்து ஊர் (6)
விடை: மயிலாடுதுறை
விளக்கம்: ‘மயில்’ (கந்தர் வாகனம்) + ‘ஆடுதுறை’ (நெல் ஆராய்ச்சி நிறுவனம் இந்த ஊரில் இருக்கிறது) = மயிலாடுதுறை
10.தாயாதி கொஞ்சம் அந்நிய அபிராமியைப் பாடியதா? (5)
விடை: அந்தாதியா
விளக்கம்: ‘தாயாதி’ + ‘அந்’ (கொஞ்சம் அந்நிய) = ‘அந்தாதியா’. ‘அபிராமி அந்தாதி’ என்பது ஒரு புகழ்பெற்ற பாடல்.
11.எது நடுவில் கனிவாய் திரும்ப எண் (4)
விடை: எழுபது
விளக்கம்: ‘எது’ நடுவில் ‘பழு’ (கனிவாய்) திரும்பி வந்து ‘எழுபது’ என்ற எண் ஆனது.
13.ஆபரணம் பொட்டுக்கு மேல் குறிப்பிட்டு (3)
விடை: சுட்டி
விளக்கம்: பெண்கள் நெற்றியில் அணியும் ஆபரணம் = ‘சுட்டி’. ‘குறிப்பிட்டு’ என்ற பொருளிலும் வருகிறது.

Sorry, the comment form is closed at this time.

   
© 2012 புதிர்மயம் Suffusion theme by Sayontan Sinha