குறுக்கெழுத்து – 5 புதிருக்கான விடைகளும் விளக்கங்களும்:
குறுக்காக:
1. கசடற முடிக்காமல் பாகிரதி பாதி கலைய சுசீலாவுக்கு ஜானகி (2, 3)
விடை: சக பாடகி
விளக்கம்: ‘கசட’ + ‘பாகி’ (பாகிரதியில் பாதி) கலைய
4. தெய்வப் புலவருடைய முதலின் முடிவு உருண்டையானது (3)
விடை: உலகு
விளக்கம்: தெய்வப் புலவர் = திருவள்ளுவர். முதல் குறள் ‘உலகு’ என்று முடியும்.
6. முழுமையான குரலில் யார் தலையை வார நடுவில் வைக்க (3)
விடை: வாயார
விளக்கம்: ‘யார் தலை’ = ‘யா’. ‘வார’ நடுவில் வைத்தால் ‘முழுமையான குரலில்’ என்ற பொருளில் வரும்.
7. பரமபதம் தறுதலை விட்டுப் பொட்டுடன் சுற்றி விளையாடுவது (5)
விடை: பம்பரம்
விளக்கம்: ‘தறுதலை’ = ‘த’. ‘பரமபதம்’ – ‘த’ = ‘பரமபம்’. ‘ம’-வுக்கு ஒரு பொட்டு வைத்து சுற்றினால் ‘பம்பரம்’.
8. மாலை பின்னல் தலையில் பிள்ளையார் சுழியிடு (4)
விடை: ஆரம்பி
விளக்கம்: ‘மாலை’ = ‘ஆரம்’. ‘பின்னல் தலை’ = ‘பி’.
9. கோபுர வீட்டு முதல்வர்களை விலக்கித் திருப்பு (4)
விடை: புரட்டு
விளக்கம்: ‘கோபுர வீட்டு’ – ‘கோ’ – ‘வீ’ (முதல்வர்கள் – முதல் எழுத்துக்கள்) = ‘புரட்டு’. ‘திருப்பு’ என்ற பொருளில் வரும்.
12. தேசம் பாதி கடந்து குழம்பியும் நம்பிக்கையில்லை (5)
விடை: சந்தேகம்
விளக்கம்: ‘தேசம்’ + ‘கந்’ (பாதி கடந்து) குழப்பினால் ‘சந்தேகம்’.
14. இரயிலோடும் ஓசையில் பாதி மாட்டிக்கொள் (3)
விடை: சிக்கு
விளக்கம்: ‘இரயிலோடும் ஓசை’ = ‘சிக்கு புக்கு’. அதில் பாதி ‘சிக்கு’. ‘மாட்டிக்கொள்’ என்ற பொருளில் வரும்.
16. ஆறு முடியும் இடத்தை அறியக் கொண்டை ஒரு வகை (3)
விடை: கடலை
விளக்கம்: ஆறு முடிவது கடலில். கொண்டைக்கடலை ஒரு வகைக் கடலை.
17. சமணத்தில் ஒரு பிரிவு நாத்திகம் பரப்பியதா? (5)
விடை: திகம்பர
விளக்கம்: ‘நாத்திகம் பரப்பியதா’-வில் ‘திகம்பர’ ஒளிந்திருக்கிறது. இது சமணத்தில் ஒரு பிரிவு.

நெடுக்காக:

1. சென்னை ஆட்டோ பயணம் குலுக்கி வீழ்ச்சியா? (3)
விடை: சரிவா
விளக்கம்: ‘சென்னை ஆட்டோ பயணம்’ = ‘சவாரி’. அது குலுங்கினால் ‘சரிவா’. ‘வீழ்ச்சியா’ என்ற பொருளில் வரும்.
2. பாயசம் இடையில்லாமல் கொடுக்க பளபள திரவம் (5)
விடை: ‘பாதரசம்’
விளக்கம்: ‘பாயசம்’ – ‘ய’ (இடையெழுத்து இல்லாமல்) _ ‘தர’ (கொடுக்க).
3. கௌரவ ஆசிரியர் நீர் பருகி திரும்ப (4)
விடை: கிருபர்
விளக்கம்: ‘நீர் பருகி’-யில் ‘கிருபர்’ மறைந்திருக்கிறது. கௌரவர்களின் ஆசிரியர் கிருபர்.
4. உன் தலை பழுப்பது பழுதில்லாமல் பெருக்க (3)
விடை: உப்ப
விளக்கம்: ‘உ’ (‘உன்’ தலை) + ‘பழுப்பது’ – ‘பழுது’ = ‘உப்ப’. ‘பெருக்க’ என்ற பொருளில் வரும்.
5. முடிவுக்கு வராமல் இரு, பழ நுனியுடன் வணங்கு (5)
விடை: குழம்பிடு
விளக்கம்: ‘ழ’ (‘பழ’ நுனி) + ‘கும்பிடு’ (வணங்கு).
8. பசு கவிதையில்லாமல் பாசமாகவே கலந்தது வெறியுடன் (5)
விடை: ஆவேசமாக
விளக்கம்: ‘ஆ’ (பசு) + ‘பாசமாகவே’ – ‘பா’ (கவிதையில்லாமல்).
10. கயவன் பாதி தலையுடன் கலந்து வந்தது யாரும் அறியாதது (5)
விடை: ‘ரகசியம்’
விளக்கம்: ‘கய’ (கயவன் பாதி) + ‘சிரம்’ (தலை) கலந்தால் ‘ரகசியம்’. ‘யாரும் அறியாதது’ என்ற பொருளில் வரும்.
11. கயிலைவாசி மயங்கும் ராகம் இடை கட்டு நீங்கி காதில் போகட்டும் (4)
விடை: காம்போதி
விளக்கம்: ‘காதில் போகட்டும்’ – ‘கட்டு’ – ‘ல்’ (இடையெழுத்து). இராவணன் காம்போதி ராகத்தால் சிவனை மயக்கியதாக புராணம்.
13. இதன் வாழ்க்கைப் பயணம் வடிகட்டி வரை (3)
விடை: தேயிலை
15. வெப்பம் தணிய வார இறுதி வருமுன் நீராடு (3)
விடை: குளிர
விளக்கம்: ‘குளி’ (நீராடு) + ‘ர’ (வார இறுதி). ‘வெப்பம் தணிய’ என்ற பொருளில் வரும்.

Sorry, the comment form is closed at this time.

   
© 2012 புதிர்மயம் Suffusion theme by Sayontan Sinha