குறுக்கெழுத்து – 6 புதிருக்கான விடைகளும் விளக்கங்களும்:

குறுக்காக:
4. காற்றாடி நுனிகளை கரம் நடுவில் வைத்து முட்கள் சுற்றுவது (5)
விடை: கடிகாரம்
விளக்கம்: ‘காற்றாடி நுனிகள்’ = ‘கா’, ‘டி’.’கரம்’ நடுவில் வைத்தால் ‘கடிகாரம்’.

5. பாதிக் குடத்தில் புகலிடம் (3)
விடை: திக்கு
விளக்கம்: ‘பாதிக் குடத்தில்’ ‘திக்கு’ மறைந்து வருகிறது. ‘புகலிடம்’ என்ற பொருளில் வருகிறது.

7. முதல்வர் வருவாய் அறிய விருப்பம் (2)
விடை: அவா
விளக்கம்: ‘முதல்வர்’ = ‘அ’ (முதல் எழுத்து). ‘வருவாய்’ = ‘வா’.

9. முறையாகக் கல்லாத அறிவு பெற அறிவியல் மெய்யின்றி முதலில் வினவு (3, 3)
விடை: கேள்வி ஞானம்
விளக்கம்: ‘அறிவியல்’ = ‘விஞ்ஞானம்’, ‘மெய்யின்றி’ => ‘விஞானம்’, ‘வினவு’ = ‘கேள்’.

10. சிவந்தது நித்தம் தம்மை விட்டுக் கலங்கி இடை மாறிச் சென்றது (6)
விடை: செந்நிறத்து
விளக்கம்: ‘நித்தம்’-‘தம்'(தம்மை விட்டு)=’நித்’. ‘சென்றது’=>’செந்றது’ (இடை(யினம்) மாறி). ‘நித்’ + ‘செந்றது’ -> கலங்கி -> செந்நிறத்து. ‘சிவந்த’ என்ற பொருளில் வருகிறது.

11. சிறு வயதில் செய்ய வேண்டியது அரிசியிலும் வருமோ? (2)
விடை: கல்
விளக்கம்: ‘இளமையில் கல்’

12. காத்திரு, பின்னர் மசி, உலகத்தை ஆளத் தேவையானது (3)
விடை: பொறுமை
விளக்கம்: ‘காத்திரு’ = ‘பொறு’, ‘மசி’ = ‘மை’. ‘பொறுத்தார் பூமி ஆழ்வார்’.

13. படைப்பவன் முதல் தலையெழுத்தைக் குழப்பியது அருமை (5)
விடை: பிரமாதம்
விளக்கம்: ‘படைப்பவன்’ = ‘பிரம்மா’, ‘முதல் தலையெழுத்து’ = ‘த’. ‘பிரம்மா’ + ‘த’-> குழப்பி -> ‘பிரமாதம்’. ‘அருமை’ என்ற பொருளில் வருகிறது.

நெடுக்காக:
1. அரசன் முடியோர நுனி (2)
விடை: ‘கோடி’
விளக்கம்: ‘அரசன்’ = ‘கோ’. ‘முடி ஒரம்’ = ‘டி’. ‘நுனி’ என்ற பொருளில் வருகிறது.

2. முதல்வருடன் தலைகள் வீழும்படி யாரங்கே குற்றம் செய்தது? முதலில் மேடையில் நிறுத்துவதுதான் சரி! (7)
விடை: அரங்கேற்றம்
விளக்கம்: ‘முதல்வர்’ = ‘அ’ + ‘யாரங்கே குற்றம்’ – ‘யா’ – ‘கு’ (தலைகள் வீழும்படி) = ‘அரங்கேற்றம்’. ‘முதலில் மேடையில் நிறுத்துவது’ என்ற பொருளில் வருகிறது.

3. வீண் செலவில்லாமல் மாட்டிக்கொள்ள நடுவில் பாரமா? (6)
விடை: சிக்கனமாக
விளக்கம்: ‘மாட்டிக்கொள்ள’ = ‘சிக்க’. ‘பாரமா’ = ‘கனமா’.

6. ரசமாக விலகிய விவாகரத்து சமாசாரம் குழப்பத்தில் பூட்டின் நுழைவாயில் (7)
விடை: சாவித்துவாரம்
விளக்கம்: ‘விவாகரத்து’ + ‘சமாசாரம்’ – ‘ரசமாக’ -> குழப்பத்தில் -> ‘சாவித்துவாரம்’. ‘பூட்டின் நுழைவாயில் என்ற பொருளில் வருகிறது.

8. வருடம் ஐம்பத்தியிரண்டு முறை (6)
விடை: வாரந்தோறும்

14. நாணயத்தின் ஒரு புறம் சிறப்பு (2)
விடை: தலை
விளக்கம்: ரூபா நாணயத்தில் இரு பக்கங்கள் -> பூ/தலை. ‘தலை’ என்றால் ‘சிறப்பு’ என்று ஒரு பொருள் உண்டு.

Sorry, the comment form is closed at this time.

 
© 2012 புதிர்மயம் Suffusion theme by Sayontan Sinha