குறுக்கெழுத்து – 2

 
 Posted by guru at 8:04 pm

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்ப ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். அனுப்ப விரும்பவில்லையா? விடைகளையும் விளக்கங்களையும் இங்கே பார்க்கவும்.


குறுக்காக:

4. பாதி மருந்துடன் உண்டாகி சிவந்த காரணம் (5)
5. சக்கரக் கிழங்கு (3)
7. அமெரிக்கத் தலைவர் தலை தப்ப நரகாசுரன் தலை சாய உதவினாள் (2)
9. கண்ணன் வாத்தியம் புழலின்றி பழி வாங்கும் விளையாட்டு (6)
10. கடை மாறாது பழைய கடையில் ‘பழைய’ இருப்பது (2, 4)
11. வாலில்லாச் சிறுவன் போவது விரைவாக அல்ல (2)
12. மஞ்சள் பூ அரசனுடன் சேர்த்து ஔவை தந்தது (3)
13. காலொடிந்த தாரை முன் பத்தில் ஒன்று இவர்களை நினையான் ஏகப்பத்தினியான் (2,3)

நெடுக்காக:

1. வாலிழந்த கால வாகனம் உரம் (2)
2. கூடினால் இரண்டில் பாதி சுட்டால் பசு மாறாட்டம் (3, 4)
3. முள் குத்தும் உணர்வுடன் கூளத்தின் துணையுடன் இடுப்பில் இதன் இருப்பிடம் (6)
6. வேழத்தலை உயிர்விட்டு அமருமா, காலால் கலந்து குமரனைக் கூப்பிடு (2,5)
8. சிலம்பில் இருக்கும் சொக்கத் தங்கமே (3,3)
14. மறைத்த விஷயம் வெளியே தெரிந்துவிடுமோ என்று கவலைப்படு (2)
Transliteration scheme:
உயிர் a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய் k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி) ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம் H : ஃ

நகல் அனுப்புக

© 2012 புதிர்மயம் Suffusion theme by Sayontan Sinha