குறுக்கெழுத்து – 5
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.
|
குறுக்காக: 1. கசடற முடிக்காமல் பாகிரதி பாதி கலைய சுசீலாவுக்கு ஜானகி (2, 3)
4. தெய்வப் புலவருடைய முதலின் முடிவு உருண்டையானது (3)
6. முழுமையான குரலில் யார் தலையை வார நடுவில் வைக்க (3)
7. பரமபதம் தறுதலை விட்டுப் பொட்டுடன் சுற்றி விளையாடுவது (5)
8. மாலை பின்னல் தலையில் பிள்ளையார் சுழியிடு (4)
9. கோபுர வீட்டு முதல்வர்களை விலக்கித் திருப்பு (4)
12. தேசம் பாதி கடந்து குழம்பியும் நம்பிக்கையில்லை (5)
14. இரயிலோடும் ஓசையில் பாதி மாட்டிக்கொள் (3)
16. ஆறு முடியும் இடத்தை அறியக் கொண்டை ஒரு வகை (3)
17. சமணத்தில் ஒரு பிரிவு நாத்திகம் பரப்பியதா? (5)
நெடுக்காக: 1. சென்னை ஆட்டோ பயணம் குலுக்கி வீழ்ச்சியா? (3)
2. பாயசம் இடையில்லாமல் கொடுக்க பளபள திரவம் (5)
3. கௌரவ ஆசிரியர் நீர் பருகி திரும்ப (4)
4. உன் தலை பழுப்பது பழுதில்லாமல் பெருக்க (3)
5. முடிவுக்கு வராமல் இரு, பழ நுனியுடன் வணங்கு (5)
8. பசு கவிதையில்லாமல் பாசமாகவே கலந்தது வெறியுடன் (5)
10. கயவன் பாதி தலையுடன் கலந்து வந்தது யாரும் அறியாதது (5)
11. கயிலைவாசி மயங்கும் ராகம் இடை கட்டு நீங்கி காதில் போகட்டும் (4)
13. இதன் வாழ்க்கைப் பயணம் வடிகட்டி வரை (3)
15. வெப்பம் தணிய வார இறுதி வருமுன் நீராடு (3)
|
||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
முத்து – எல்லா விடைகளும் சரியே. வாழ்த்துக்கள்.
மும்பை ஹரிஹரன் – எல்லா விடைகளும் சரியே. வாழ்த்துக்கள்.
Good one. I enjoyed lots of clues
14, 16, 17 A
1,15 D
1D was very cute..
Thank you!
இந்த முறை எல்லோரும் 100/100 வாங்கிவிட்டார்கள். அடுத்த முறை இன்னும் கொஞ்சம் கடினமாக்க வேண்டும் போலிருக்கிறது!
மேலும் விடை எழுதியவர்கள் – டோனி, மாதவ், சாந்தி, ஸ்ரீதரன், யோசிப்பவர், ராமையா, 10அம்மா, நாகராஜன், KR சந்தானம், வாஞ்சி, பார்த்தசாரதி, VR பாலகிருஷ்ணன் மற்றும் பூங்கோதை.