குறுக்கெழுத்து – 6

 
 Posted by guru at 12:30 pm

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தைப் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும்.


குறுக்காக:

4. காற்றாடி நுனிகளை கரம் நடுவில் வைத்து முட்கள் சுற்றுவது (5)
5. பாதிக் குடத்தில் புகலிடம் (3)
7. முதல்வர் வருவாய் அறிய விருப்பம் (2)
9. முறையாகக் கல்லாத அறிவு பெற அறிவியல் மெய்யின்றி முதலில் வினவு (3, 3)
10. சிவந்தது நித்தம் தம்மை விட்டுக் கலங்கி இடை மாறிச் சென்றது (6)
11. சிறு வயதில் செய்ய வேண்டியது அரிசியிலும் வருமோ? (2)
12. காத்திரு, பின்னர் மசி, உலகத்தை ஆளத் தேவையானது (3)
13. படைப்பவன் முதல் தலையெழுத்தைக் குழப்பியது அருமை (5)

நெடுக்காக:

1. அரசன் முடியோர நுனி (2)
2. முதல்வருடன் தலைகள் வீழும்படி யாரங்கே குற்றம் செய்தது? முதலில் மேடையில் நிறுத்துவதுதான் சரி! (7)
3. வீண் செலவில்லாமல் மாட்டிக்கொள்ள நடுவில் பாரமா? (6)
6. ரசமாக விலகிய விவாகரத்து சமாசாரம் குழப்பத்தில் பூட்டின் நுழைவாயில் (7)
8. வருடம் ஐம்பத்தியிரண்டு முறை (6)
14. நாணயத்தின் ஒரு புறம் சிறப்பு (2)
Transliteration scheme:
உயிர் a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய் k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி) ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம் H : ஃ

நகல் அனுப்புக

© 2012 புதிர்மயம் Suffusion theme by Sayontan Sinha